எடப்பாடி பக்கா பிளானோடு செய்த சம்பவம்!

Advertisements

சென்னை:

நேற்று சட்டசபையில் அதிமுக நடத்திய யார் அந்த சார்? போராட்டம் கவனம் பெற்றது. ஆளுநர் ஆர். என் ரவியின் நடவடிக்கை காரணமாகக் கவனிக்கப்படாமல் போன இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுவாகப் பதாகைகள், பெரிய நோட்டீஸ்கள் இருந்தால் அதை உள்ளே கொண்டு செல்ல முடியாது. இதைத் தடுக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டப்படி ஏ4 ஷீட்டை… நான்காக மடித்து… லஞ்ச் பேக்கில் மறைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

அதேபோல் யார் அந்த சார்? பேட்ஜை சட்டை பைக்குள் வைத்து அதற்கு முன் பக்கத்தில் ஜெயலலிதா புகைபடத்தை வைத்து மறைத்து உள்ளனர். அதிமுக இந்தப் போராட்டத்தைச் சட்டசபைக்கு உள்ளேயே கொண்டு வந்தது திமுகவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாம்.

சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த சார்? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது… கடந்த 1 வாரமாக இந்தப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாகப் புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்… யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாகப் போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது.

கிட்டத்தட்ட அதிமுகவை இந்தப் பிரச்சாரம் தூக்கத்திலிருந்து எழுப்பி உள்ளது. உறங்கிக்கிடந்த அதிமுக தொண்டர்கள் திமிறி எழுந்துள்ளன. அதிமுகவை லைம் லைட்டிற்கு கொண்டு வந்த இந்தப் பிரச்சாரத்திற்கு பின்னணியில் இருப்பது வேறு யாரும் இல்லை… அது பிரஷாந்த் கிஷோர் என்று கூறப்படுகிறது.

அவர் தந்த ஐடியாவின் அடிப்படையிலேயே அதிமுகவின் இந்தப் போஸ்டர் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. யார் அந்த Sir? என்ற போஸ்டர் கண்டிப்பாக மக்களிடம் சென்று சேரும் என்று அவர்தான் ஐடியா தந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு:

சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் யாரெனப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில்… அந்த ஆள் தனியாகச் செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடிக் காரில் ஒருவர் வந்ததாகக் கூறி உள்ளார்.

இதெல்லாம் போக… உன்னுடைய வீடியோவை… வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்த சார் யார்… அந்த சார் யார்… அவர் பல்கலையில் வேலை செய்பவரா… இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம்.

பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாகப் பணிகளைச் செய்வதில்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளைச் செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான். அவரின் ஐடியா பெயரிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *