
அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அணுசக்தி போர் கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில் கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. அதற்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் லெபனானை தாக்கியது. இந்த தாக்குதலில் லெபனான் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நடைப்பெற்ற பேச்சுவார்தையில் இரு தலைவர்களும் தற்காலிமாக 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். உலகம் முழுவதிலும் 9 போர்களை நிறுத்திய நிலையில், இந்த 10-வது போர் நிறுத்தம் தனக்கு கவுரவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், லெபனானில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.





