17 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய அனில் அம்பானி !

17 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய அனில் அம்பானி தில்லி அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

திருபாய் அம்பானி நிறுவிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய நிறுவனங்களை அவர் மகன்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் பிரித்துக்கொண்டனர்.

அதிகக் கடன்கள் வாங்கியதாலும் தொலைத்தொடர்புத்துறையில் உள்ள வீழ்ச்சியாலும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் நொடிப்பு நிலையடைந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்துக்காகப் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் அனில் அம்பானி வாங்கிய 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டார்.

இந்த மோசடி குறித்து வழக்குப் பதிந்துள்ள அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *