Actress Shilpa Manjunath: இடையழகை காட்டி கிளாமர் அவதாரம்!

Advertisements

நடிகை ஷில்பா மஞ்சுநாத், இடையழகி ரம்யா பாண்டியனை பின்னுக்கு தள்ளும் கவர்ச்சியில்… எடுத்துக் கொண்டுள்ள போட்டோ ஷூட் தற்போது வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க, கிளாமர் அவதாரம் எடுத்துள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. கன்னடத்தில் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘முன்கரு’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ‘எமன்’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அடுத்ததாக விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

எதிர்பாராத பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ்சுடன் வெளியான இந்தப் படத்தில், ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். முதலுக்கு மோசமில்லாத வெற்றிபெற்ற இந்தப் படத்தை அடுத்து கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் ரசிகர்களைக் கவரும் வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு… இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் இயக்கத்தில் வெளியான, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்கிற படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மாடர்ன் பெண்ணாக வந்து கவர்ச்சியில் கிரங்கடித்தார் ஷில்பா.

மேலும் தமிழில் இவர் நடித்த பேரழகி ஐ எஸ் ஓ, தேவதாஸ் பிரதர்ஸ், ஓணன், சிங்கப்பெண்ணே போன்ற படங்களின் கதை தேர்வு சரியாக இல்லதாததால்… வந்த தடம் தெரியாமல் போனது

தற்போது இவரின் கைவசம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படங்கள் மட்டுமே உள்ளது. மீண்டும் தமிழில் விட்ட இடத்தைப் போராடி வரும் ஷில்பா மஞ்சுநாத் அடிக்கடி ரசிகர்களைக் கவரும் விதத்தில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இடையழகி ரம்யா பாண்டியனை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு… இடையில் சில்வர் செயின் அணிந்து, இளம் ரசிகர்களை இம்சித்துள்ளார். இந்தப் போட்டோஸ் தற்போது வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *