தொழிலதிபர் விமான நிலையத்தில் உயிரிழப்பு!

Advertisements

சென்னை:

மேற்குவங்கம் மாநில தொழிலதிபர் பிரகாஷ் குமார் சிங்கி (63). 2 ஆண்டுகளுக்கு முன்பு, தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கொல்கத்தா, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.

புற்றுநோய் குணமடையாததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். அதற்காக, பிரகாஷ் குமார் சிங்கி, மகனுடன் அகமதாபாத்திலிருந்து விமானத்தில் நேற்று அதிகாலை சென்னை வந்தார்.

பிரகாஷ் குமார் சிங்கியை வீல் சேரில் அமர வைத்து, அவருடைய மகன் தள்ளிக்கொண்டு வெளியில் அழைத்து வந்தார். அப்போது பிரகாஷ் குமார் சிங்கி, திடீரென ரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். இதையடுத்து, அவரை உடனடியாகச் சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றித் தகவல் அறிந்து வந்த விமான நிலைய போலீஸார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *