
நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ்,விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடத்திற்கு சென்றார்.
அப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி,திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.பின்பு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு சென்று மாதாவை வழிப்பட்டார்.
அப்போது வெகு நேரமாக சாலையில் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்ததால்பொதுமக்களுக்கும் போலீசாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு பொரவாச்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகை தந்தார்.
அப்போது கல்லூரி எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,திராவிடர் கழகத்தினர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியை ஏந்தி கண்டன கோஷங்கள்எழுப்பினர்.ஆர்பாட்டத்




