Tiruppur: போராட்டத்தில் சாமியாடி குறி சொன்ன பெண்!

Advertisements

உப்பாறு அணைக்குத் தண்ணீர் கேட்டு அணையில் உள்ள சேற்று நீரில் இறங்கி விவசாயிகள் 4,வது கட்ட போராட்டம் நடத்தினர், அப்போது அணைக்குத் தண்ணீர் கொடுத்து விடு எனபொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குச் சாமியாடி குறி சொன்ன பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., திட்டத்தில் உபரி நீரைத் திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பல கட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து, நான்கு முறையும், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி அங்குக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில், 4,ஆம் கட்ட போராட்டத்தில் உப்பாறு அணையில் உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அணை நீரில் இறங்க வேண்டாமென வலியுறுத்தினர். இருந்தபோதிலும் 400- க்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலிலிருந்து சாரை சாரையாக நடந்து வந்து அணை நீரில் இறங்கி உப்பாறு அணைக்குத் தண்ணீர் வேண்டுமெனக் கோஷம் எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சாரதி என்ற பெண்மணிக்குச் சாமி வந்து ஆடியது அதில் உப்பாறு அணைக்குத் தண்ணீர் தராத பொதுப்பணித்துறை அதிகாரிகளைச் சாபம் இடுவதாகச் சாமி ஆடினார்.

இதனால் போராட்டத்தில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு சாமியாடிய பின் அணைக்குத் தண்ணீர் கொடுக்காமல் இழுத்தடிக்காதேயென அதிகாரிகளுக்கு அருள்வாக்கு சொல்லித் தனது அருள்வாக்கு நிறைவு செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *