தி.மு.க.-அ.தி.மு.க. பிரச்சனை தெரு சண்டை- சீமான்!

Advertisements

வடலூர்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூர் வந்தார். அங்குள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் அவர் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

தி.மு.க.-அ.தி.மு.க. பிரச்சனை தெருச் சண்டை. 60 ஆண்டுகளாக இதைத் தான் செய்து வருகிறார்கள். தி.மு.க.வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள்.

அ.தி.மு.க.வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறிக் கூறி வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். முட்டுக்கட்டை நிர்வாகிகளாக இருப்பார்கள்.

வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும்போது பாறையாக இருந்தாலும் உருட்டிக் கொண்டு தான் செல்லும். நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை.

நிர்வாகிகள் விலகல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். சிற்றூர்களையெல்லாம் நகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.

கிராமங்களில் இருந்துதான் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வருகிறது. அதனால்தான் எங்களை அப்படியே வாழ விடுங்கள் என்கிறார்கள், இதில் என்ன பிரச்சனை.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. வில்லேஜ் சிட்டி உள்ளதா?

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *