
சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 13 கிலோமீட்டர் தொலைவுக்குக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மேம்பாலம் கட்டுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், பழைய மாமல்லபுரம் சாலையிலும் வாகனங்களின் போக்குவரத்து அதிகமுள்ளதால் காலையிலும் மாலையிலும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.




