Eradication Of Counterfeit Liquor: 6,200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!

கல்வராயன் மலைப் பகுதியில் மதுவிலக்கு சோதனையில் 6,200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டன.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் கடத்தினாலோ விற்றாலோ கள்ளச்சாரயத்தை காச்சினாலோ இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளில் மீது பாரப்பச்ச மின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா,  அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு ஆய்வாளர் தாரணேஸ்வரி தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தீவிர மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது தண்ணீர்குத்து மற்றும் சிறுகலூர் ஓடைகள் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 31 பேரல்களில் சுமார் 6,200 லிட்டர் சாராய ஊரல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் கடத்தினாலோ விற்றாலோ கள்ளச்சாரயத்தை காச்சினாலோ இடுபடும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளில் மீது பாரப்பச்ச மின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது படுவார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *