Advertisements

ஐந்து ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாளை நடைபெற உள்ள தவெக கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் விசிக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாகப் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.
மேலும், ஐந்து ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும் என்றும், வெகவுக்கு அளித்த வாக்குறுதியை கட்டாயம் காப்பாற்றுவோம் என்றும் கூறினார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவுக்குக் கட்சியின் உட்கட்சி பிரச்சனைகள் தான் காரணம் என்று தெரிவித்தார்.
Advertisements



