TTF Vasan Accident: டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு!

காஞ்சிபுரம் அருகே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வீலீங் செய்தபோது டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கினார். யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளார்.

அப்போது, ‘பைக் ஸ்டண்ட்‘ சாகசம் செய்ய முயன்ற டிடிஎஃப் வாசன் சாலையோர பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்து காயமடைந்துள்ளார். இதனையடுத்து, காயமடைந்த வாசன் காஞ்சிபுரம் அடுத்த மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதனையடுத்து, டிடிஎப் வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *