Advertisements

பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கோண்டார். அப்போது, பேசிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
ஆனால், நிரபராதிகள் யாரும் தப்பித்தவறிகூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று தெரிவித்தார். மேலும், முக்கியமாக, பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Advertisements


