தவெக-வின் ‘அரிசி’ விளம்பரத்திற்கு பாஜக எதிர்ப்பு!

அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை தவெகவினர் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடான செயல் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மதுரையில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசியை முறைகேடாக நலத்திட்ட உதவியாக வழங்கியதாக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டி மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் இலவச அரிசியை தங்களின் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடான செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

விநியோகிக்கப்பட்ட பைகளில் துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேஷன் அரிசி இருந்ததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீதும், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *