கொட்டும் மழையில் நனைந்தபடி வீடியோ வெளியிட்ட படக்குழு!

Advertisements

Dear Movie Tamil

டியர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது…

இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘டியர்’. இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Dear Movie Tamil

ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரைச் சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டியர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் படக்குழு தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *