அஜித்தை முன்னுதாரணமாக வைத்து அறிவுரை கூறிய ஐ.பி.எஸ்!

Dr. R. Stalin IPS | Ajith Kumar

நடிகர் அஜித்தை முன்னுதாரணமாக வைத்து மக்களுக்கு அறிவுரை கூறிய ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்டாலின்…

அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். அதன்பின்னர் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்களம், முகவரி, தீனா, பில்லா, என்னை அறிந்தால், வீரம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார்.

அவ்வப்போது உலகம் முழுவதும் பைக் பயணம் செல்லும் அஜித், தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அஜித்தின் பைக் பயணித்தின்போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dr. R. Stalin IPS | Ajith Kumar

அஜித்தின் இந்தப் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஸ்டாலின் ஐ.பி.எஸ் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அந்தப் பதிவில், “பைக்கில் செல்லும்பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாகச் செல்லுங்கள்…தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *