அட்டவணையை மாற்றிய ஐ.சி.சி!

Advertisements

2023 Cricket World Cup | India Vs Pakistan

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை அக்டோபர் 14-ந் தேதிக்கு மாற்றி ஐ.சி.சி அறிவிப்பு...

புதுடெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதிவரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. அன்றைய தினத்தில் நவராத்ரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காகப் போட்டி அட்டவணையை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

2023 Cricket World Cup | India Vs Pakistan | Reschedule

அதன்படி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் அக்டோபர் 12-ந்தேதி மோதும் போட்டியை அக்டோபர் 10-ந்தேதி மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணை மாற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானை தொடர்பு கொண்டன. போட்டிகள் மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல மேலும் சில மாற்றங்களும் இருக்கிறது. இதனால் விரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *