Tamannaah Bhatia: திருமணத்துக்கு ரெடியான நடிகை தமன்னா!

Advertisements

நடிகை தமன்னா, குடும்பத்தோடு கௌகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில், சுமார் 18 வருடங்களுக்கு மேல்… ஹீரோயினாக நடித்து ரசிகர்களை அசரடித்து வரும் மில்க் பபியூட்டியான நடிகை தமன்னா, இந்த ஆண்டு தன்னுடைய காதலர் விஜய் வர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தமன்னா 35 வயதை எட்டி விட்டதால், இனியும் அவர் திருமணத்தை தள்ளி போட கூடாது என்பதிலும், முடிந்தவரை சீக்கிரம் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதிலும், தமன்னாவின் பெற்றோர் உறுதியாக உள்ளனர்.

விஜய் வர்மா மற்றும் தமன்னாவின் காதலுக்கு இரு வீட்டு தரப்பும் பச்சை கொடி காட்டிய பின்னர்… இருவரும் வெளிப்படையாகவே டேட்டிங் செய்ய துவங்கி விட்டனர்… அதே போல் இருவருமே தற்போது கமிட் ஆகி உள்ள படங்களை நடித்து முடித்து விட்டு திருமணம் செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் நடிகை தமன்னா, வெகேஷனுக்காக வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த முறை தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினரோடு… கௌகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார் தமன்னா.

விளக்கேற்றி நடிகை தமன்னா… காமாக்யா தேவியை தரிசனம் செய்துள்ளதால் திருமணத்திற்காக தான் இந்த வழிபாடா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் “என் அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள்” என்கிற ஹாஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *