மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டி எடுத்த அதிரடி முடிவு…

Advertisements

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உலா வந்த ஷில்பா ஷெட்டி, தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனக்கான ஓபனிங்கை தொடங்கினார். இந்திய திரைத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகபணியாற்றியவர் .

ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. கணவர் ராஜ் குந்த்ராவுடன் சேர்ந்து பிசினஸ் செய்து வரும் ஷில்பா ஷெட்டி, பெஸ்ட் டீல் டிவி என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தை நடத்தினர். இந்த நிறுவனத்தின் பெயரில் தான் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெஸ்ட் டீல் டிவி நிறுவனத்தில் 87 சதவீத பங்குகளை வைத்திருந்த ஷில்பா ஷெட்டி, அதன் இயக்குநராக இருந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஷில்பா – ராஜ் குந்த்ரா தம்பதி ராஜேஷ் ஆர்யா என்ற ஏஜென்ட் மூலம் தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, தங்களது நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக 75 கோடி ரூபாய் வேண்டும் என்று தீபக்கிடம் கோரியுள்ளனர்.

ஆனால், அந்த பணத்தை கடனாக பெற்றால் டாக்ஸ் பிரச்சினை வரும் என்று கூறியுள்ளனர். எனவே, அந்த தொகையை முதலீடாக மாற்றுவதற்கு கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட தீபக்கிடம், உரிய நேரத்தில் பணம் திருப்பித் தரப்படும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதையடுத்து தீபக் கோத்தாரி 2015 – 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் 60 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷில்பா ஷெட்டி, மும்பையில் செயல்பட்டு வரும் தனது உணவகத்தை மூடுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் BASTIAN BANDRA என்ற பெயரில் செயல்பட்டு இந்த உணவகம் கடல்வாழ் உயிரின உணவுகளுக்கு பெயர் போனது. மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில், நடிகை ஷில்பா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *