“ஆறாத ரணம், தீராத வலி” – கரூர் சம்பவம் குறித்து முதல்வர் விஜய் உருக்கம்!

கரூர் சம்பவம் ஆறாத ரணமாக, தீராத வலியாக உள்ளது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் செப்டம்பர் 27 ஆம் தேதி தன் வாழ்நாளில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக மாறிய நாள் என்று தெரிவித்துள்ளார். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்பதாகவும், நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும் அரணாகவும் என்று துணை நிற்போம் என்று கூறியுள்ளார். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் நிகழ்ந்த இடத்தில் த.வெ.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் த.வெ.க. ஆட்சியில் இணைந்தவருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அவர் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், இதில், கூட்டநெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *