உதயநிதி விரக்தியின் உச்சத்தில் பகலிலேயே இவ்வளவு நிதானமின்றி பேசுவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆர்.டி.ஐ.-யில் சட்டம் ஒழுங்குத் தொடர்பாக விதிவிலக்கு எல்லாவற்றிற்கும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
சாதி, மதம் மோதல் தொடர்பான வழக்குகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் முற்றிலுமாக லஞ்சம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், எந்த இடத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாகக் குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டும்தான் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உதயநிதி விரக்தியின் உச்சத்தில் பகலிலேயே இவ்வளவு நிதானமின்றி பேசுவார் என்றால், அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
இப்படி ஆபாசமாக பேசும் உதயநிதியை நம்பி கட்சியில் பயணிக்கலாமா? என்றும், திமுகவுக்கு எதிர்காலம் உண்டா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், ஆட்சி, அதிகாரம், பணம் மற்றும் தங்களது குடும்ப நலனைத் தவிர, அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் கவலை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.


