இது சினிமா இல்ல, இதுதான் உண்மையான அஜித்..!

நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்தது உண்மையில் மெய்சிலிர்க்கும் அனுபவம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் தொடரில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுள்ளார். அஜித் குமாரின் ரேசிங்கை நேரில் காண திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் துபாய் சென்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் அஜித் குமாரை சந்தித்தார். இந்நிலையில், அஜித் குமாரை சந்தித்தது, பந்தய களத்தில் கிடைத்த அனுபவம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில், உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு என்றும் யாஸ் மெரினா சர்க்யூட்டில் அண்ணனை நேரில் சந்தித்தது உண்மையில் மெய்சிலிர்க்கும் அனுபவம் என்று கூறினார். இது கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்றும் இது சினிமா இல்லை, இதுதான் உண்மையான அஜித் குமார்,” என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *