பிரதமரின் வேண்டுகோளை ஏற்று டெல்லி அரசு அதிரடி.. வாரத்தில் 2 நாள் WFH..!

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருளைச் சேமிக்க “புத்திசாலித்தனமான செலவு” செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்..

அதன் தொடர்ச்சியாக, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று (மே 14, 2026) அரசு ஊழியர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

டெல்லி அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இதேபோல வாரத்தில் 2 நாட்கள் WFH முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அலுவலகம் செல்ல மெட்ரோ ரயிலைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு ரீதியான கூட்டங்களில் 50 சதவீதத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது..

டெல்லி அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *