தவெக ஓட்டுகளை நீக்கிட்டாங்களா? வெடிச்ச புது சர்ச்சை.. அமைச்சர் ராஜ்மோகன்.!

வாக்காளர் திருத்தப் பணியின் மூலம் பல வாக்காளர்களை நீக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் தவெக வென்றிருக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள எழும்பூரில் சி.பா. ஆதித்தனாரின் 122 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது உருவச் சிலைக்குத் தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன், அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் வெங்கட்ரமணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், ஆதித்தனார் இதழியல் வரலாற்றில் தனக்கெனத் தனி முத்திரைப் பதித்தவர் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேரவை தலைவராக இருந்தப்போது தான் திருக்குறளை முதலில் படிக்க வேண்டும் என்ற மரபு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கரூரில் இன்று மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியைத் தமிழக வெற்றிக் கழகம் அன்றும் சரி, இன்றும் சரி எப்போதும் எதிர்க்கிறது என்று கூறினார்.
வாக்காளர் திருத்தப் பணியின் மூலம் பல வாக்காளர்களை நீக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் தவெக வென்றிருக்கும் என்று தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *