Advertisements

சென்னைப் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே காதல் ஜோடியைச் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இர்பான் என்பவர் தியாகராய நகரிலுள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் செம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், இர்பான் வேலை செய்யும் அதே கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இருவருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். இந்தத் தகவலறிந்த குடும்பத்தினர் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே அவர்களைப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தை அறிந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Advertisements


