ரஷிய எண்ணெய்க்குப் பதில் அமெரிக்க எனர்ஜி? டிரம்ப் வகுக்கும் மாஸ்டர் பிளான்..!

இந்தியாவின் மாபெரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ரஷியாவுக்கு எதிராக வியூகம் வகுக்கும் வகையில் இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி தர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசியபோது, இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு நாடுகளை சார்ந்திருப்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறினார்.

ரஷியாவுக்கு மாற்றாக இந்தியாவின் மாபெரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் முதன்மை நாடாக மாற அமெரிக்கா தயாராக உள்ளது என்று உறுதி அளித்தார். உலகளவில் சமையல் கியாஸ் மற்றும் திரவ இயற்கை கியாஸ் ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரும் காலங்களில் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *