பொதுமக்கள் தெருநாய்களா? நடிகர் ராகவா லாரன்ஸின் சர்ச்சை பேச்சு..!

Advertisements

காஞ்சனா கதாநாயகன் தற்போது அரசியலில் எண்ட்ரி கொடுப்பது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளானது. இது குறித்து அவர் பேசிய சர்ச்சை பேச்சும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. அது என்ன சர்ச்சை என்பதை நம் ஜெம் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கலாம்,

இந்த சர்ச்சை குறித்து பார்ப்பதற்கு முன்பு  இவர் அரசியல் வருவதற்கான காரணத்தை இவர் தோற்றத்திலிருந்து பார்க்கலாம். முருகையன் – கன்மணி தம்பதியினருக்கு பிறந்த கண்ணன் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் ஏழைக்கு செய்யாத சேவைகளே இல்லை  என்று தான் சொல்லனும் .. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை உதவிகள்,  மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், A. P. J. Abdul Kalam பெயரில் அறக்கட்டளை, கேரள வெள்ள நிவாரண நிதி உதவி, தனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றிய செயல் போன்ற எண்ணற்ற உதவிகளை நடிகனாக இருந்து தமிழ் நாட்டு மக்களுக்கு வாரிய வழங்கிய வள்ளல் என்றுதான் சொல்லனும்..
அப்போதிலிருந்தே இவர் அரசியலுக்கு வந்தால்  என்ன ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் தங்களுக்குள்  விம்மி முழுங்கி கொண்டிருந்தார்கள் என்றே  சொல்லாம். அதன் வெளிபாடுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில்  அணில் தளபதி விஜய்  அவர்கள் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளான பெரம்பூர் தொகுதி , திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடினார். அதில் ஒரு தொகுதியான திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்துவிட்டு அதை யாரோ ஒருவர் மத்தியில் விட்டுவிட்டு இன்று அவர் டெல்லியில் விளையாடி கொண்டிருக்கிறார்.இதற்கிடையில் இந்த தொகுதிக்க விஜயின்  நண்பி திரிசா, ராகவா இன்னும் சிலர் போட்டிபோடுவார்கள் என்ற எதிர்பார்த்திருந்தார்கள்  எமன் அரசியலாளர்கள்.. இங்கிருந்துதான் லாரன்ஸீன் அரசியல் பயணம் சற்று தமிழகத்தில்   தலைதூக்க ஆரம்பித்தது. நாரதர் போல் மக்கள் லாரன்ஸையும் தூண்டிவிட்டு  அரசியல் களத்தில் இறக்கிவிட்டு ஆழங்கட்டி அரசியல் மழையில் இன்று புன்கைத்து கொண்டிருக்கிறார்கள்

இவர்கள் போட்ட இந்த அரசியல் ஆழங்கட்டி மழையினால் இவரது கால்கள் கரகாட்டம் ஆடும் இந்த சூழலில் இன்று இவரது அரசியல் ஆட்டம்தான் ராகவா லாரன்ஸ் சென்னை உத்தண்டியில் உள்ள அவரது இல்லத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், “நான் அரசியலுக்கு வருவது குறித்து எனது ரசிகர்களுடனும், நிர்வாகிகளுடனும் விரிவாக ஆலோசித்துள்ளேன்.

அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளேன். புதிய கட்சி தொடங்குவதா அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கட்சியில் இணைவதா என்பது குறித்த எனது இறுதி முடிவை மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று கூறினார்.
இங்குதான் அரசியல்வாதிகளுக்கு  சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது ஏற்கனவே உள்ள கட்சியில் திருச்சி தொகுதிக்கு காய் நகர்த்திருக்கிறார் நடிகர் ராகவுவ்அதன் முன்னெடுப்பாகதான் கடந்த ஒரு மாத காலத்தில் தவெக ஆட்சி சிறப்பாக உள்ளதாகவும், அமைச்சர்கள் ராஜ்மோகன், ரமேஷ் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், கோவில்களுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதற்கு வரவேற்பு அளிப்பதாகவும் இப்படியெல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடத வகையில் புகழ்ந்து தள்ளியிருக்கிறாம்.

நான் அரசியலுக்கு வர வேண்டுமா? இல்லையா? எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா?” என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான். மக்கள் ‘Yes’ என்று சொன்னால் அரசியலுக்கு வருவேன், ‘No’ என்று சொன்னால் ஒதுங்கிவிடுவேன் என்று காணொலி மூலம் மக்களுக்கு அரசியல்  தோற்றம் குறித்து காட்சி கொடுத்திருக்கிறார்.ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருந்தபோது, தன்னிடம் “நீங்கள் சுகாதாரத்துறை அல்லது கல்வித்துறை அமைச்சர் ஆகலாம்” என்று சிலர் கூறினர். ஆனால், “பதவிகள் எல்லாம் படித்தவர்களுக்குத் தான், நான் அதிகம் படித்தவன் அல்ல; மக்களின் நலனே முக்கியம்” என்று அவர்களுக்குப் பதிலளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், “அண்ணாமலை அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அண்ணாமலை உள்பட யார் வேண்டும் என்றாலும், அரசியலுக்கு வரலாம். அண்ணாமலை சிறந்த அரசியல் புரிதல் கொண்டவர். புதுப்புது ஆட்கள் வருவது நல்லதுதான். ரஜினிகாந்த் ஆல்தி பெஸ்ட் என்று என்னிடம் சொன்னார். எனது முடிவை தெரிவித்த பிறகு எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்க செல்வேன்” என்றார்.

இப்படியெல்லாம் முன்னும் பின்னும் முரனாக மாறி மாறி தோற்றத்திற்கு ஏற்றாற் போல் அரசியலில் புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று  இவர் சந்தித்த ஊடகச் சந்திப்பு இவரது அரசியல் காய் நகர்த்தலை மேலும் பின்னோக்கி நகர்த்தியிருக்கிறது என்றே சொல்லாம்.
காய் பழுப்பதற்கு முன்பே கல் அடிப்பட்டது என்பார்களே அதுபோல நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் பிரவேசம் தொடர்பான யூகங்களுக்கு மத்தியில் பேசுககையில்

“அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என மக்களிடம் கருத்துக்கேட்டு வீடியோ போட்டிருந்தேன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நீங்கள் வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். விரைவில் என் அம்மா மூலம், ரசிகர்களை வைத்து ஒரு நல்ல முடிவை தெரிவிப்பேன்.” என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தவெக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது,

என்னை பொறுத்தவரை கடந்த ஒருமாத காலமாக தவெக அரசின் ஆட்சி சிறப்பாகத்தான் உள்ளது. கோயில், பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடியது வரவேற்கத்தக்கது. பள்ளிக்கல்வித்துறை, அறநிலையத்துறை அமைச்சர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஒரு புது அரசு என்பதால் அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

இங்குதான் தமிழக மக்களை தலைகுனிய வைத்துவிட்டது இவரது பேச்சு. இவரது நன்மதிப்பை இன்று இவர் குறைத்துகொண்டதன் பேச்சு  என்னவென்றால் நம்மையே உதாரணமாக எடுத்துக் கொண்டால், புது ஏரியாவிற்கு வாடகை வீட்டிற்கு சென்றால், வீடு வெளியிலிருந்து பார்க்க நன்றாக இருக்கும். வீட்டிற்குள் சென்றால்தான் அங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது தெரியும்.
அங்கிருக்கும் தெருநாய்கூட நம்மை பார்த்து குரைக்கும்.

அப்போது அதற்கு பிடித்த பிஸ்கட்டை போட வேண்டும். சில தெருநாய்கள் பிரியாணிதான் சாப்பிடும். அப்போது அதற்கு பிடித்த உணவை கொடுத்து அதை கத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வீடு, ஒரு நாய்க்கே இப்படி என்றால், ஒரு நாட்டை, மாநிலத்தை பார்ப்பவர்களுக்கு கால அவகாசம் வேண்டும். மாற்றம் வேண்டும் எனக் கேட்கிறீர்கள், அந்த மாற்றத்திற்கு நேரம் கொடுக்கவேண்டாமா? புது அரசுக்கு கால அவகாசம் கொடுக்கவேண்டும்.

எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைப்பது பொறாமையால்தான். தவெகவை விமர்சிப்பதற்கு முன்னால் நாம் என்ன கழட்டினோம் என்பதை முந்தை அரசியல் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று தீமுக தியசக்திக்கும், தூய சக்திக்கும் நெத்தியடி பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசின் செயல்பாடு குறித்த அவர்களை தெருநாய் என்கிறாறா அல்லது பிஸ்கட் திங்கவும், சுடச்சுட பிரியாணிக்கு திங்கவும்  ஆசைப்படும் பொது மக்களாகிய நம்பை தெருநாய்  என்கிறாறா
கேள்விக்கு வேறு உதாரணமே கிடைக்கவில்லையா என்று நாரதராகிய நம் மக்கள் தெருநாய்களை உதாரணமாக காட்டி பேசியதற்கு இணையவாசிகள் பலரும் ராகவா ராகவா ஏன் இப்படி செய்தாய் என்று கண்டபடி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *