
ஐதராபாத்:
தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முஸ்லிம்களுக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், ரம்ஜான் நோன்புக் காலம் வரவிருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்கு வேலை நேரத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில், முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்பலாமெனத் தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தி அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர நிலை ஏற்பட்டால் ஊழியர்கள்.
