
சென்னை:
தமிழக பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, சென்னையில் ராயபுரம், பிராட்வே, எழும்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
மேலும் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கினர்.
மேலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாகச் சென்னைக்கு வர வேண்டிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சேரன் விரைவு ரெயில், நெல்லை விரைவு ரெயில், முத்துநகர் விரைவு ரெயில் உள்ளிட்ட பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
இதனிடையே, புறநகர் ரெயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
