பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம்!

Advertisements

கேரள மாநிலத்தின் கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையை முன்வைத்து, பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள், பிரியங்கா உள்ளிட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலோர மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி, அவர்கள் போராட்டம் நடத்தினர்.

வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி இதுகுறித்து தெரிவித்ததாவது, ‘வயநாட்டில் கடந்த டிசம்பர் 27 முதல் வனவிலங்குகள் 7 பேரைக் கொல்லவந்துள்ளன.

இது மிகவும் கவலைக்குரியது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வயநாடு தொகுதிக்கு நிதி வழங்க வேண்டும். நான் இன்று மக்களவையில் இந்தப் பிரச்சனையை முன்வைப்பேன்’ என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *