
தமிழ் நாடு அரசு பெண்களின் நலனுக்காக விடியல் பயணத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதற்கிடையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘பிங்க்’ ஆட்டோக்களைத் தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகப் பயணிக்க, பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் பிங்க் ஆட்டோக்கள் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட உள்ளன.
பெண்கள் சுய தொழிலில் முன்னேறுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
இதற்காக, பெண்களுக்கான ஆட்டோக்கள் முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான மாற்றம் மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
அவசர நிலைகளில் புகாரளிக்கவும்.
