Seeman: என்னை விமர்சனம் செய்தவர்கள் இப்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளதாகச் சீமான் தெரிவித்தார்.

திருவாரூர்:திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. வலிமையான கடற்படை வைத்திருக்கும் ஒன்றிய அரசு தமிழக மீனவர்களைக் காக்க மறுப்பதேன்? மீனவர்களது வாக்குத் தேவை. ஆனால், அவர்களது வாழ்க்கை மற்றும் உயிரைப் பற்றிக் கவலை இல்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தால் தமிழக மீனவர்களைத் தொடமுடியுமா?” என்றார்.

நரேந்திர மோடி உக்ரைன் நாட்டைப் பார்க்கவில்லைபோல அதற்காகச் சென்றுள்ளார். முதலமைச்சர் அமெரிக்க பயணம் சென்று பத்தாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சரும் டி.ஆர்.பி.ராஜாவும் கூறி வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்று வழக்கு தொடருவேன். என்றார்.

அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” நான் உங்களிடம் மாட்டிக் கொள்வதால் என்னிடமே இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள். விஜய் மாநாடு போட்டுக் கட்சியை அறிவிக்கும்போது, அவரிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். என்னை விமர்சனம் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர். எனக்கு விமர்சனங்கள் அலுத்துவிட்டது” எனச் சீமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *