நார்வே செஸ் தொடரில் வரலாற்று வெற்றி – பிரக்ஞானந்தாவை பாராட்டிய முதல்வர் விஜய்!

நார்வே செஸ் தொடரை வென்று சாதனைப் படைத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்து பாராட்டினார்.

இந்தச் சந்திப்பின்போது முதலமைச்சர் விஜய் உற்சாகத்துடன், “செஸ் போர்டை எடுத்து வரச் சொல்லி என்னிடம் விளையாடினார்” என்று பிரக்ஞானந்தா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

இளம் வீரரின் இத்தகைய சாதனையைக் கொண்டாடும் விதமாக, அவருக்கு ரூ. 50 லட்சம் வெகுமதியை முதலமைச்சர் விஜய் வழங்கி சிறப்பித்தார்.

முதல்வரிடம் நேரில் பாராட்டுப் பெற்றதும், தனது சாதனையை அரசு அங்கீகரித்து கௌரவித்ததும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *