Advertisements

கருப்பு திரைப்படத்தைத் தடை செய்யக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அதில் முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதித்துறையை அவமதிப்பதாகக் கூறி கருப்பு திரைப்படத்தைத் தடை செய்யுமாறு வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதிகளைப் புனிதர்களாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்றும், நீதித்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை தாங்களே வெளியேற்றி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், ஒரு கார்ட்டூனிஸ்ட்டிற்கு உள்ள அதே சுதந்திரம் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் பொருந்தும் என்றும், எனவே இப்படத்திற்குத் தடை விதிக்கப் போதிய முகாந்திரம் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
Advertisements


