
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்படுகிறது.
பல சந்தர்ப்பங்களில், ஒன்றிய அரசின் நிதி பங்கு காலாண்டின் இறுதியில் அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
நிதியாண்டின் முடிவிற்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
