கட்சி பணிகளை செய்யாத காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்படலாம்: ராமச்சந்திர குன்ஷியா தகவல்!

Advertisements

முறையான பணி செய்யாத காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்படலாம் என தமிழ்நாடு பார்வையாளர் ராமச்சந்திர குன்ஷியா தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுவாக்குவதற்காகவும்  மாவட்ட தலைவர்களை நியமிக்கவும் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் துவக்கப்பட்டு  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்திற்கான சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் பெரம்பூரில்ரைச் சேர்ந்த எம் கே பி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டெல்லி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த வடசென்னை பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த ராமச்சந்திரா குன்ஷியா கலந்துகொண்டுச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்றும் முன்னதாக  4 மாநிலத்தில் இந்த பணியை முடித்துவிட்டு தற்போதுதான்  தமிழகத்தின் வடசென்னை பகுதியில் துவக்கியுள்ளோம்  என்றும் அவர் கூறினார். புதியதாக யாரேனும் மாவட்ட தலைவராக விரும்பினால்  அவர்கள் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அதற்கான விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் பூர்த்திசெய்து தரவெண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முருகன் மாநில செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *