குழந்தைகள் மீதான பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட இன்றைய அரசு தீவிரம் காண்பிக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஓடி விளையாடி படித்து சுதந்திரமாக குழந்தை தன்மையை அனுபவிக்க வேண்டிய குழந்தைகளை தனது சுகத்திற்காக அனுபவித்த கொடூர மனம் படைத்த மிருகத்தனமான மனிதர்களை பார்க்க வேண்டி இருக்கிறது என்று உள்ளம் குமுறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏழ்மையை பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையை கசக்கி வீசி எறியும் கொடூரங்கள் நடந்தேறியது என்று நினைக்கும் போது மனது பதைபதைக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி ஆதார முழுமையாக கிடைக்கவில்லை என்று சொல்வது மட்டுமல்லாமல், இன்னொரு வழக்கு அதுவும் பெண்கள் சார்ந்த வழக்கை எதிர்வாதமாக வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஜெம் என்றால் மதிப்பு மிக்கவை ஆனால் மதிப்பில்லாத கல் மனத்தை கொண்டு சிறுமிகளை வேட்டையாடியதை நினைத்தால் மனது வேதனை அடைகிறது என்று கூறியுள்ளார். குழந்தைகளை காப்பாற்றாத இவரை காப்பாற்றுவதற்குப் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஒரு வெறுப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் இன்றைய அரசும் அவர் தண்டிக்கப்படுவதில் தீவிரம் காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

