பருவமழை காரணமாக கடலூருக்கு விரைந்த மீட்புப் படையினர்!

வடகிழக்குப் பருவமழை காரணமாகக் கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் 30 பேர் கடலூருக்கு வந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் தொடர்ந்து இயற்கைப் பேரிடர்களாலும் சீற்றங்களாலும் பாதிக்கப்படும் மாவட்டம் என்பதால் அரக்கோணத்தில் இருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையின் அணியினர் வந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப் படையினரிடம் ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது மீட்புப் பணிக்குத் தயாராக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *