கோவையில் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை உடல் வீசப்பட்ட கொடூரம்!

கோவையில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தையின் உடல் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவைமாவட்டம் காளப்பட்டி–கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள  மாரியம்மன் கோவிலின் அருகே, பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சாலையோரத்தில் கிடந்த உடலைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்குத்  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள்  குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின்  கைகள், கால்கள் மற்றும் இடுப்பு வரை வெட்டப்பட்டு, உடல் மட்டும் தனியாக வீசப்பட்டிருந்தது காவல்துறையினரை   அதிர்ச்சியடையச் செய்தது. இந்த கொடூரச் செயலுக்கு பின்னால் யார் இருக்கலாம் என்பது குறித்து பல்வேறு  கோணங்களில் அவர்கள்  விசாரித்து வருகின்றனர். இத்தகைய மனிதநேயமற்ற செயலைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பாதுபாப்பு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

கோவையில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தையின் உடல் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவைமாவட்டம் காளப்பட்டி–கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள  மாரியம்மன் கோவிலின் அருகே, பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சாலையோரத்தில் கிடந்த உடலைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்குத்  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள்  குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின்  கைகள், கால்கள் மற்றும் இடுப்பு வரை வெட்டப்பட்டு, உடல் மட்டும் தனியாக வீசப்பட்டிருந்தது காவல்துறையினரை   அதிர்ச்சியடையச் செய்தது. இந்த கொடூரச் செயலுக்கு பின்னால் யார் இருக்கலாம் என்பது குறித்து பல்வேறு  கோணங்களில் அவர்கள்  விசாரித்து வருகின்றனர். இத்தகைய மனிதநேயமற்ற செயலைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பாதுபாப்பு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *