கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை – CM விஜய் அதிரடி அறிவிப்பு!

கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 75 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டின், மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 75 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கமலினியின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று கூறியுள்ளார். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *