ஏமனில் தாக்குதலுக்கு பதிலடியாக, சவுதியில் இரண்டு முக்கிய இடங்களை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள “முக்கியமான இடங்களையும்”, அந்நாட்டின் துறைமுக நகரமான யான்புவில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் ஏமனின் ஹவுதிகள் தாக்குதல் நடத்தின. இது தொடர்பாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைநகர் சனாவை தாக்க சவுதி மேற்கொண்ட குற்ற முயற்சிகளுக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஏமன் ஆயுத படைகள், பெருமளவிலான பாலிஸ்டிக், குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி இரண்டு வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.




