மீண்டும் மீண்டுமா? நகை பிரியர்களுக்கு ஷாக்..!

Advertisements

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ஏறத்தாழ ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன் தினம் செப்டம்பர் 20ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,290க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று செப்டம்பர் 22ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,360க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,580க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் 148 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,48,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *