இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
செஸ்டர்-லெ-நகரில், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 48 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில், அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 67 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்கிய இலங்கை அணி 37 ஓவர்களுக்கு 176 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதில், மிகச் சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதன் மூலம் இலங்கை அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *