ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்துப் பேசினர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தனக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே மிக நல்ல உறவு இருப்பதாகவும், மோதலுக்குத் தீர்வு காண இருவரும் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
உக்ரைன் – ரஷ்யா இருவருமே போர் முடிவுக்கு வருவதைக் காண விரும்புகிறார்கள் என்று நான் நினைப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அந்த ஒப்பந்தம் என்னவென்று நான் சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
உக்ரைனியத் தரப்பினர் மிகச் சிறந்த போராளிகள், மற்றும் மிகவும் திறமையானவர்கள் என்று பாராட்டினார். எனவே, ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.


