இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம்.!

Advertisements

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கேரள பகுதிகளிலும், வடக்கு லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும் வளிமண்டல காற்றழுத்த சுழற்சிகள் நிலவுகிறது.

இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதன்படி, தமிழகத்தில்- நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடியக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *