Lok Sabha Election 2024: பெண்ணுக்கு ஓபிஎஸ் ரூ.2000 வழங்கியது தொடர்பாக விசாரணை!

Advertisements

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அறந்தாங்கி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சுயேட்சை சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஓ. பன்னீர்செல்வம் ஆரத்தி காட்டிய பெண்ணுக்குக் கொடுப்பதற்காகத் தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுக்கிறார். அதில் 500 ரூபாய் நோட்டுகளாக வருகிறது. அதில் 4 நோட்டுகளை எடுத்து அவர் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்தநிலையில் தேர்தல் அதிகாரி விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *