
யோகாவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரெட் சாலையில், 12 ஆவது சர்வதேச யோகாசன தினத்தையொட்டி, பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொதுமக்களுடன் யோகாசனம் செய்தார். தொடர்ந்து, அவர் நிகழ்ச்சியில் பேசிய போது, யோகா என்பது இன்று நமது தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கு மட்டும் இன்றியமையாதது அல்ல என்று குறிப்பிட்டார்.
உலகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கும் யோகா ஒரு தேவையாகும் என்று கூறினார். யோகாவை நாம் ஒரே ஒரு நாளுக்குள்ளோ அல்லது ஒரே ஒரு நிகழ்ச்சிக்குள்ளோ சுருக்கிவிட மாட்டோம். யோகாவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம் என்று தெரிவித்தார். இதில், மேற்கு வங்கம் முதல்வர் சுவேந்து அதிகாரி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், தமிழகத்தில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவர்களுடன் யோகாசனம் செய்தார்.



