நீலகிரியில் கனமழை எச்சரிக்கை – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வடமேற்கு வங்கக் கடல் அதையொட்டிய ஒடிசா – மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
இதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதில், நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் உள்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதனால், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *