புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக, அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தற்போது, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவமனை வட்டாரங்கள், அவர் நலமாக இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்புவாரெனத் தெரிவித்துள்ளன.
