விசிகவில் இருந்து வந்த பனையூர் பாபு இடைத்தேர்தலில் போட்டி.?

Advertisements

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பல விதமான சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா, மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணைவது என அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இதனிடையில்  சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார் பனையூர் பாபு. சமீப காலமாக திருமாவளவனின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை. அவர் எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றம் இருப்பதாகவும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சிந்தனை செல்வன், பனையூர் பாபு தன்னுடைய முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாற்றுக்கருத்துகள் எதுவாக இருந்தாலும் அதனை திருமாவளவனுடன் பேசி தீர்த்து கொள்ளலாம் எனவும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் பனையூர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் பனையூர் பாபு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மதுராந்தகம் தொகுதியில் போட்டி போடுவதற்கு திமுகவிடம் வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பனையூர் பாபுவுக்கு பனையூர், மதுராந்தகம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர் பொறுப்பினை வழங்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்து இருந்ததாம். இப்படியான நிலையில் மதுராந்தகம் தனித்தொகுதி என்பதால், அங்கு போட்டியிடும் வாய்ப்பினை கேட்டுள்ளார் பனையூர் பாபு.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *